தமிழைத் தமிழாய்ப் பேசுவோம்


"தமிழைத் தமிழாய்ப் பேசுவோம்" இயக்கம் கடந்த ஆகஸ்ட் 2021-ல் வட அமெரிக்காவில் தொடங்கப்பட்டது.

பன்னாட்டு சூழலில் ஆங்கிலமும்,பிற மொழிகளின் பயன்பாடும் தவிர்க்க முடியாத நிலையில், 100க்கும் மேற்பட்ட நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் ,தாய்மொழி தெரிந்தவர்களிடையே பிறமொழி கலப்பின்றி தூய தமிழில் பேசும் நிலையை ஏற்படுத்த விழிப்புணர்வும், பழக்கமும், பயிற்சியும் அவசியமாகிறது.

தமிழை பிறமொழி கலப்பில்லாமல் குறிப்பாக ஆங்கிலத்தின் தாக்கத்திலிருந்து விடுவிக்க, இளம் தலைமுறையினர், குறிப்பாக பெற்றோர்கள் முயற்சிக்கவேண்டும் என்ற நோக்கில், அதுகுறித்தான புரிதலை ஏற்படுத்த, 3 முதல் 6 மாதம் சுயமாக பயிற்சி எடுத்து உரிய கையேடு, இணையவழி பயிற்சிக்கட்டமைப்பு ,தமிழறிஞர்கள் வழிகாட்டுதலுடன் பயிற்சிவழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இதன் தேவை தெரிந்தாலும், இதை நடைமுறைப்படுத்தி வெற்றிகாண உரிய உத்திகளை வகுப்பதில் தொடர்ந்து கலந்துரையாடி, இந்த முக்கிய அமைப்பின் தலைமைப்பொறுப்பை உரியவர் ஏற்று தொடர்ந்து செயலாற்றவேண்டும் என்ற இலக்கில் தேடிவந்தோம். இதற்கு பொருத்தமான ஆளுமையாக நமக்குக் கிடைத்தவர் கடனாவில் வசிக்கும் பேராசிரியர் முனைவர். இரா.செல்வகுமார். தூய தமிழ் ஆர்வலர், உலகம் அறிந்த தூய தமிழ் பற்றாளர், இதே சிந்தனையில் தொடர்ந்து இயங்குபவர்.

அமைப்பு தொடங்கப்பட்டுவிட்டது, செயல்திட்டங்கள் முடிவுசெய்யப்பட்டுவிட்டன , தலைமைபொறுப்பு , தமிழறிஞர்களைக் கொண்ட கருத்துரைஞர் குழு, தன்னார்வக் குழுவினர் அடையாளம் காணப்பட்டுவிட்டனர், அடுத்து செயலில் இறங்கவேண்டியதுதான்..

முதல் அடியாக, இன்று தமிழர்களின் பயன்பாட்டில் உள்ள ஆங்கில, பிறமொழி வாக்கியங்களைத் தொகுத்து அதற்கு இணையான பயன்பாட்டுத் தமிழ் வாக்கியங்களை சேர்த்து ஒரு கையேடு உருவாக்குதல். இதுவே, இந்த மூன்று முதல் ஆறு மாத கால பயிற்சியின் கையேடாக அமையும்.

நண்பர்களே, நீங்கள் தமிழில் பேசும்போது இந்த வார்த்தை, இந்த வாக்கியம் அதிகம் ஆங்கிலம், பிறமொழியில் வந்துவிடுகிறது என்று நினைப்பவற்றை, பிறர் பேசும்போது தமிழ் பேசுவதாக நினைத்து இப்படி ஆங்கிலம் கலந்து பேசுகிறார்களே என்று உணர்த்தவற்றை கீழ்காணும் சுட்டியில் சேர்க்கவும். இணையான தமிழ்வார்த்தை தெரியாவிட்டால் விட்டுவிடவும்.

நாம் பயன்பட்டு வார்த்தைகளுடன் விரைவில் ஒரு கையேடு வெளியிட்டு, அடுத்ததாக பயிற்சி வகுப்புகளை உலகெங்கும் தமிழர்கள் வாழும் நாடுகளில் தன்னார்வ முயற்சியாக அவரவர் எடுக்க பயிற்றுநரை பயிற்றுவிக்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

நம் அன்றாட பயன்பாட்டில் உள்ள பிறமொழி வார்த்தைகளை, வாக்கியங்களை இங்கே சேர்க்கவும்.

பேரன்புடன்,
தமிழைத் தமிழாய்ப் பேசுவோம் இயக்கம்.
மின்னஞ்சல்: thamizhaaipesu.valaitamil@gmail.com

தொடக்கவிழா

குழு

திட்ட ஒருங்கிணைப்புக் குழு

ஒருங்கிணைப்பாளர்

திரு. ச.பார்த்தசாரதி

நிறுவனர், வலைத்தமிழ்
தலைவர்

பேராசிரியர். முனைவர்.
செ.இரா.செல்வகுமார்

கனடா

தமிழைத் தமிழாய்ப் பேசுவோம்-கையேடு உருவாக்கம்

குழுத் தலைவர்

தகைசால் பேரா. முனைவர்.
வீ.ரேணுகாதேவி

மதுரை, தமிழ்நாடு.

காணொளிகள்

பதிவு செய்ய

பயிற்சிக்கு, தன்னார்வலராக சேர

REGISTER

தமிழைத் தமிழாய்ப் பேசுவோம்-கையேடு

REGISTER

தொடர்புக்கு

மின்னஞ்சல்:

thamizhaaipesu.valaitamil@gmail.com

முகநூல் குழு:

Join Facebook Group